விக்கிரமாதித்யன் கதைகள் 

முதற்பகுதி :  பூர்வ கதை 


1. காட்டில் கண்டெடுத்த கனகமணி சிம்மாசனத்தின் கதை:

      உலகத்தின் கிரீடம் போல் உஜ்ஜயினிப் பட்டணம் முன்னொரு காலத்தில்  திகழ்ந்தது.

     நீலவானத்தை  முத்தமிடும் பட்டுக் கொடிகளும், நிலா உப்பரிகைகளும்,மாட மாளிகைகளும் , மணிக்கோபுரங்களும் தந்த ஸ்தூபிகளும், நந்தவனங்களும், விசாலமான நவமோகன  வீதிகளும், சிருங்கார மண்டபங்களும், சிந்தையை கவரும் விசித்திரவினோதங்களும் நிறைந்தது எந்தநேரமும் ஜேஜே என்று விளங்கும் அந்நகரம் மாயா புரியாகவே காட்சியளித்தது. அந்தப்  பட்டணத்தை  அறநெறி வழுவாத  போஜமகாராஜன் ஆண்டு வந்ததால்  அதற்குத் தர்மாபுரி என்கிற  என்கிற பெயரும் நிலவி வந்தது.

போஜராஜன் சதா தன் குடி ஜனங்களின் நலத்திலே கண்ணுங் கருத்த்தும்  கொண்டவனாய் ஆட்சி புரிந்து வரவே , அந்தச் சக்கர வர்த்தியின்  பெயர் உலகெங்கும் பிரசித்தியாயிற்று.  போஜனுக்குப்  பிரதம மந்திரியாக விளங்கிய நீதிவாக்கிய மந்திரி என்பவரும் உஜ்ஜயினிப் பட்டணத்தில் தருமம் தழைத்தோங்கும்படி செய்து வந்தார்.

அந்தநாளையில், பக்கத்திலுள்ள காட்டுப் பிரதேசத்திலிருந்து துஷ்ட மிருகங்கள் அடிக்கடி நாட்டினுள் புகுந்து மக்களைத் துன்புறுத்துவதோடு அவர்களின் உடமைகளான ஆடு, மாடு , கோழி முதலான பிராணிகளைக் கொன்று தூக்கிச் சென்றன.

சூரியன் உச்சியை நெருங்கும் சமயம் வந்தது வெயில் தகித்தது, படைகளும் கலைத்து விட்டனர் போஜராஜன் வேட்டையை  நிறுத்திவிட்டு கலைப்பார விரும்பினான்.

மணிமுடி மன்னனும் அவனுடைய பரிவாரங்களும் அருகிலே தாக சாந்திக்கு தண்ணீரும், சோர்வு நீங்க நிழலும் கிடைக்குமா! என்று நாலா திசைகளிலும் சுற்றிப் பார்த்து வரும் போது நன்கு விளைந்திருந்த   கம்பங்கொல்லை ஒன்றை அடைந்தார்கள் சுற்றிலும் படர்ந்து அடர்ந்த கிளைகளோடு மரங்களும் நடுவே முற்றிய கதிர்களை உடைய கம்பு பயிரில் கொண்ட கொல்லையானது மன்னனின் மனதை மிகவும் கவர்ந்தது.

அந்தக் கொள்ளை சரவண பட்டன் என்னும் ஓர் அந்தணனுக்கு சொந்தமானது முற்றிய கதிர்களை பறவைகள் கொத்தி தின்னாமல் இருக்க காவலுக்கு அவன் கொள்ளையின் நடுவே பரன்  ஒன்றை கட்டி அதன் மீது ஏறி அமர்ந்து இருப்பான் பறவைகள் கூட்டமாக வந்து கதிர்களில் உட்காரும்போது கற்களை எரிந்து அவற்றைத் துரத்தினான்.

அன்றைய தினம் சரவண பட்டன் பரண்மீது அமர்ந்து இருந்தான் வேட்டையில் களைத்துப்போய் முகம் கருத்து வரும் மன்னர் பிராணனையும், பரிவாரங்களையும் பார்க்கும் போது அவனுக்கு பரிதாபமாக இருந்தது.

சரவண பட்டன் பரண்மீது இருந்தபடியே வரவேண்டும்! வரவேண்டும் வேட்டையில் மிகவும் களைத்துப் போய் இருக்கிறீர்கள் இதோ இந்த கம்பங்கொல்லை முழுவதும் என்னை சேர்ந்ததே முற்றிய கதிர்கள் இருக்கின்றன இனிமையான பழங்கள் கொத்துக் கொத்தாக தொங்குகின்றன வெள்ளரிப்பிஞ்சும் இருக்கின்றன தாங்கள் தாராளமாக தங்கள் பரிவாரங்களுடன் கொள்ளையில் நுழைந்து பசி தீர சாப்பிடுங்கள் காய்ந்து போயிருக்கும் கம்பு தடைகளை குதிரைகளுக்கு கொடுக்கலாம் எனக்கு கிடைத்தற்கரிய பாக்கியமே இது, ராஜாதி ராஜா இன்று என் விருந்தாளியாக இருப்பது என் பூர்வ ஜென்ம பலன் என்று உள்ள கனிவோடு அழைத்தான்.

அவன் வார்த்தைகளை கேட்ட போஜ மகாராஜன் தன் பரிவாரங்களை அழைத்துக்கொண்டு கம்பங்கொல்லையில் நுழைந்தான். பசியால் வருந்திய போர்வீரர்கள் கதிர்களை ஒடித்து தின்ன தொடங்கினார்கள். 

சிறிது நேரத்திற்கெல்லாம் மீதிருந்த சரவண பட்டன் பறவைகளை விரட்ட கீழே இறங்கிவந்தான். அரசனுடன் வந்த போர் வீரர்கள் 'மளுக் மளுக் ' என்று கம்ம கதிர்களை உரித்துப் தின்பதையும் குதிரைகள் தட்டைகளை மேய்வதையும் கண்டதும் அந்தணனுக்கு திடீரென ஏதோ ஆத்திரம் குமுறி எழுந்தது அவன் பூபதி இடம் ஓடி வந்தான்.

போஜ மகாராஜனே  இது என்ன காரியம் கேள்விமுறையே  கிடையாதா ?நீதி நெறி வழுவாத தாங்களா இந்த அநீதமான காரியத்தில் இறங்கினாள் நீங்களும் உங்கள் பரிவாரங்களும் ஏழை அந்தணன் ஒருவனுடைய கம்பன் கொள்ளையை அளித்து கொண்டிருக்கிறீர்கள் ?என்பதை தாங்கள் அறியவில்லையா?  என் ஒரு வருஷ வருமானத்தையே பாழாக்கி விட்டீர்களே மற்றவர்கள் கெடுதல் செய்யும் போது மக்களின் தலைவரான தங்களிடம் வந்து முறையிடலாம், வேலி போன்ற மன்னரே கெடுதல் செய்யும் போது அதைப்பற்றி நான் எவரிடம் சென்று முறையிடுவேன் மதம் பிடித்த யானையை முறை தவறி நடக்கும் ஆட்சியாளரை, ஆட்சியையும், தவறு செய்யும் அறிவாளியும், யாரால் நிறுத்தம் என ஒரு பொன்மொழி உண்டு.

மேலும் தாங்கள் எல்லா நீதி சாஸ்திரங்களையும் கற்று உணர்ந்தவர் அப்படியிருக்க தாங்களே அந்தனன் ஒருவனுடைய சொத்தை பாலஆக்குகிறீர்கள் அந்தனன் சொத்து தான் உண்மையான விஷம் என்று சொல்லப்படுகிறது, விஷம் என்பது அறிஞன் ஒருவனுடைய சொத்துடன் ஒப்பிடும்போது விஷமானது, அந்தச் சொத்தை உண்மையான விஷமாகும், ஏனென்றால் விஷம் அருந்திய ஒருவனை மட்டுமே கொள்ளக்கூடியது, ஆனால் அறிஞன் சொத்தோ அபகரித்தவன்-இன் சந்ததியையும் அவர்களின் சந்ததிகளையும் கூட அழித்துவிடும் அன்றே ? இதை தாங்கள் அறிவீர்கள் என்று முறையிட்டான் சரவண பட்டன்.

அவனுடைய வார்த்தைகள் அரசனின் நீதி உள்ளத்தில் வேதனையை உண்டாக்கின.அடுத்த கணமே போஜராஜன் பரிவாரங்களை அழைத்துக் கொண்டு வெளியேறினான்,இந்த சமயத்தில் சரவணன் மீண்டும் பரண் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டான் மன்னர் பிரானும் பரிவாரங்களும் கொள்கையை விட்டு வெளியேறுவதை கண்டதும் சரவணன் மறுபடியும் திடீர் என்று  கூவினான்.

பூபதியே?ஏன் போகிறீர்கள் அதற்குள்ளாகவா தங்கள் பசி தீர்ந்து விட்டது அதனால் ஏற்பட்ட களைப்பு இன்னும் நன்கு தீரவில்லை என்பதை தங்கள் திருமுகமே காட்டுகிறது பசிதீர உணவருந்தி நிழலில் படுத்து இளைப்பாறும் வீட்டுக்கு வந்த விருந்தாளி உணவருந்தாமல் செல்வது சரியல்ல என்றான் மன்னனை வற்புறுத்தி  கூப்பிட்டான் சரவண பட்டன்.

போஜராஜனுக்கு  பெரும் வியப்பாககிவிட்டது பரண் மேல் இருந்த போது அந்த மறையவன் நம்முடைய நிலையை உணர்ந்து பசிதீர கம்பங் கதிர்களை உரித்துப் சாப்பிடுமாறு அழைத்தான்.விட்டு கீழே இறங்கி வந்ததும் அவன் உள்ளத்தில் தோன்றிய அந்த உயர்ந்த எண்ணம் மாறி விட்டது ஐயோ?கொள்ளை பாலாக போகிறதே என்ற கீழ்த்தர எண்ணம் சுயநலமே மேலோங்கி நின்றன மீண்டும் பரண் மீது ஏறியதும் விருந்து சாப்பிட அழைக்கப்பட்ட நாம் திரும்பிச் செல்வதை கண்டு வருந்துகிறேன்.இது மிகவும் விசித்திரமாக இருக்கிறது இது இந்த இடத்தின் விசேஷம் போலும் நாமும் அந்த பரன் மீது ஏறி பார்க்கவேண்டும் இவ்விதம் அரசன் தன் மனதில் நினைத்தவனாய்  சரவண பட்டன் அருகில் வந்து பரண் மீது ஏறினான்.

படிகளில் கால்வைத்து ஏறி உடனே உலகப் இறந்தவனின் உள்ளத்திலே சலனமற்ற அமைதி சூடிக் கொண்டது.

அனைவரையும் கஷ்டத்தில் இருந்து விடுவிக்க வேண்டும், உலகம் வறுமையின் பிடியில் சிக்குண்டு நாசமா வதை தடுக்க வேண்டும், தீங்கு செய்பவர்களை தண்டிக்க வேண்டும், நல்லவர்களை பாதுகாக்க வேண்டும், குடி ஜனங்களை அறநெறி பிசகாமல் பரிபாலனம் செய்ய வேண்டும், இம்மாதிரியான உயர்ந்த எண்ணங்களை போஜ மன்னன் உள்ளத்தில் தோன்றின சுருங்கச் சொன்னால் அந்த சமயத்தில் எவராவது அவன் உயிரை கேட்டாலும் கொடுக்க தயாராக அரசன் இருந்திருப்பான்.

எவ்வளவு அழகான கொள்ளை இது உள்ளத்திலே உயர்ந்த எண்ணங்களை தோன்ற செய்வதின் மர்மமென்ன?

தண்ணீரில் எண்ணெயும் ஒற்றன் இடம் ரகசியமும் தகுதி படைத்த மனிதனுக்கு சிறு பரிசும் புத்திக் கூர்மையுள்ள மனிதனிடம் தானாகவே பரவும் அன்று இந்தக் கொள்ளையின் அதிசயத்தை கண்டு பிடிப்பதற்கான வழி என்ன?

இவ்வாறு சிந்தித்த போஜராஜன் கனிவான குரலில் சரவணனை நோக்கி ஐயனே உன் புகார் நேர்மையானது இந்தக் கொள்ளையின் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு அடுத்த வருஷம் பூராவும் காலம் தள்ள வேண்டும் அதை உணராது பசியின் மயக்கத்தில் நான் பரிவாரங்களுடன் இதனுள் நுழைந்துவிட்டேன் அதற்குப் பிரதியாக இந்தக் கொள்ளையை உன்னிடமிருந்து கிரயம் கொடுத்து பெற்றுக் கொள்கிறேன் நீ விரும்புவதை தாராளமாகத் தெரிவி  என்று கேட்டான்.

அரசே தாங்கள் அனைத்தும் அறிந்தவர் எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது என்பதை தெரிந்தவர் இந்தக் கொள்ளையின் மதிப்பை தாங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் பார்க்க போனால் தங்களை மகாவிஷ்ணுவுக்கு ஒப்பிட்டு சொல்லலாம் பகவானின் கடைக்கண் பார்வை விழுந்ததால் எவரிடமும் துன்பங்களும் இருந்த இடம் தெரியாது ஒழிந்து போய் விடுமே அவ்விதமே அரசனும் கற்பக விருட்சமென சொல்லப்படுகிறான் பகவானை நேரில் காண முடியாது தெய்வம் என்னுடைய கஷ்டங்களும் வருத்தங்களும் தங்களை கண்ட மாத்திரத்திலேயே ஒழிந்து விட்டன அப்படி இருக்க இந்த கொள்ளை ஒரு பிரமாதமா என்று பணிவுடன் தெரிவித்தான் சரவண பட்டன்.


அவன் வார்த்தைகளால் மகிழ்ச்சி கொண்ட போஜராஜன் அக் கொள்கைக்கு பதிலாக அனேக பரிசுகளும் திரவியங்களும் இன்னும் நிலங்களும் அவனுக்கு கொடுத்து அக் கொள்ளையை தன்னுடையதாக ஆக்கிக் கொண்டான் மறுநாளே அவன் தன் அரசாங்க ஆட்களை விட்டு பரண் இருந்த இடத்தில் தோண்டி பார்க்கச் செய்தான்.

அவ்வாறே ஆட்கள் பூமியை வெட்டி பரிசோதித்தார்கள்.

மண்ணை ஆழமாக வெட்டும்போது டங்கு என்ற ஒலியுடன் அழகிய நவ ரத்தின சிம்மாசனம் ஒன்று தென்பட்டது போஜன் அளவில்லா ஆனந்தம் கொண்டவனாய் மேலும் பூமியை நாற்புறமும் குடைந்து வெட்டச் செய்தான் அங்கே நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட தும் 32 படிகளிலும் அழகிய பதுமை கொண்டதுமான சிம்மாசனம் இருந்தது.

போஜராஜனின் மகிழ்ச்சிக்கு ஓர் அளவில்லை அந்த சிம்மாசனம் புதைக்கப்பட்டிருக்கும் இடத்தில் நிற்கும் போதே உள்ளத்தில் உயர்ந்த மனோபாவங்கள் ஏற்பட்ட அந்த அதிசயமான நவ ரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்து ராஜ்ய பரிபாலனம் செய்தால் எவ்வளவு நற்குணங்கள் இருப்பிடமாகி புவனம் எங்கும் பிரகாசிக்கலாம் அரசன் அந்த ஆவலோடு பள்ளத்தில் இறங்கி சிம்மாசனத்தை மேலே தூக்க செய்தான் ஆட்கள் ஒன்றுசேர்ந்து சிம்மாசனத்தை தூக்க முயன்றார்கள்.

சிம்மாசனம் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை புஜபல பராக்கிரம மன்னனுக்கு ஒன்றும் தோன்றவில்லை அருகில் நின்ற நீதி வாக்கியம் மந்திரியை பார்த்தான் மந்திரி நவ ரத்தின சிம்மாசனம் இடத்தைவிட்டு பெயர மறுப்பதென்ன, மறுப்பதன் காரணம் என்ன என்று கேட்டான் போஜராஜன்.

பூபதி பூமியில் புதையுண்டு கிடந்த சிம்மாசனம் புராதான காலத்தைச் சேர்ந்தது தெய்வத்தன்மை வாய்ந்தது இதற்கு உரிய பூஜை புனஸ்காரங்கள் செய்யாமல் நாம் எடுக்கும் எந்த முயற்சியும் பலன் அளிக்காது என்றார் நீதி வாக்கிய மந்திரி.

உடனே,புவி மன்னன் புரோகிதர்களை வரவழைத்து சிம்மாசனத்துக்கு செய்ய வேண்டிய பூஜைகளையும் உபசாரங்களையும் செய்யுமாறு வேண்டினார் அதற்குப் பிறகு சிம்மாசனம் அதன் இருப்பிடத்தை விட்டு நகர்ந்து அதை கண்ட அரசன் நீதி வாக்கியம் மந்திரி ஆரம்பத்தில் சிம்மாசனம் எனக்கு சுலபத்தில் கிட்டாது போல் தோன்றியது ஆனால் இப்பொழுது உன்னுடைய ஆலோசனையின் பிரகாரம் நடந்து கொண்டதால் சிம்மாசனத்தை வெளியே எடுக்க முடிந்தது ஆகவே அறிவாளிகள் உடன் நட்புக் கொள்வது லாபகரமான தோடு சிறந்ததாகும் என்றான்.

அப்போது நீதி வாக்கிய மந்திரி மன்னனைப் பார்த்து மணிமுடி வேந்தே கேளுங்கள் எவர் ஒருவர் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் மற்றவர்களின் ஆலோசனைகளையும் கேட்காவிடில் அவன் அழிவை அடைவான் தாங்கள் அப்படி அல்ல நீங்கள் அறிவாளியாக இருந்தாலும் இவ்விஷயத்தில் என் ஆலோசனைக்கு செவி கொடுத்தீர்கள் ஆகவேதான் தாங்கள் எடுக்கும் எந்த முயற்சியும் பலன் இன்றி வீண் போவதில்லை என்றார்.

அப்பொழுது போஜ மன்னன் மீண்டும் சொன்னான் மதிமந்திரி எவனொருவன் வரப்போகும் கெடுதல்களை முன்னதாகவே உணர்ந்து ஆட்சியாளன் நல்ல தற்ற வழியிலே செல்லாது தடுத்து நேர்மையான பாதையில் அழைத்துச் செல்கிறானோ அவனே உண்மையான மந்திரி ஆவான்.

ஆம் அரசே நடு மந்திரி எப்போதும் தன் அரச பீடத்தின் தலைவனுடைய நலத்திலே கருத்து உடையவனாக இருக்கவேண்டும் என்று நீதி வாக்கிய மந்திரி பல உண்மைகளை கூறலானார்.

மந்திரிகள் இல்லாத ராஜ்யம் உரை பண்டங்களை சேர்த்துவைக்கும் எண்ணம் இல்லாத கோட்டை, அனுபவிக்கனும் இல்லாத அதிர்ஷ்டம், அறிவு இல்லாதவர்கள் இடையே தர்மசிந்தனை, வேசிகள் இடையே காதல், நீசர்கள் இடையே நட்பு, அழகிகள் இடையே சுதந்திரம், ஏழையிடம் கோபம், வேலைக்காரன் இடம் ஆத்திரம், பிரபுவிடம் அந்நியோன்யம், பிச்சைக்காரன் வீடு, சலன புத்தியுள்ள பெண்ணிடம் புனிதத்தன்மை, திருடர்கள் இடையே கவுரவம், முட்டாள்கள் இடையே முன்னேற்றம், இவை அனைத்தும் வியர்த்தனமானதே!

மேலும் ஆட்சியாளன் பெரியவர்களை கௌரவிக்க வேண்டும், அறிஞர்களின் ஆலோசனையையும் கேட்க வேண்டும், ஆண்டவனையும், அறநெறி அவர்களையும் பூஜிக்க வேண்டும், நல்ல பாதையிலே வாழ்க்கையை செலுத்த வேண்டும், என்னும் அரசனுக்கு கூறப்படும் நற்குணங்கள் அனைத்தும் தங்களிடம் காணப்படுகின்றன, அதனால் நீங்கள் ராஜாக்கள் எல்லாம் ராஜாதி ராஜாவாக  விளங்குகிறீர்கள்.

இன்னும் மந்திரியாக வருபவன் நல்ல குடும்பத்தை சேர்ந்தவன் ஆகவும், திறமைசாலியாகவும், காமாந்தகியின் நீதி சாரத்தையும், சாணக்கியனின் அர்த்த சாஸ்திரத்தையும், பஞ்ச தந்திரத்தையும், நன்கு அறிந்தவனாக இருக்க வேண்டும். மேலும் அவன் குடிமக்களின் செய்வதில் விருப்பம் உடையவனாகவும் தன் சக பிரார்த்தனைகளை நன்கு நடத்திச் செல்லும் திறமை வாய்ந்தவன் ஆகவும் அரசனுடைய போக்கிற்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தவனாக ஆட்சி பீடத்தை கஷ்டத்திலிருந்து காப்பாற்றுபவன் ஆகவும் இருத்தல் வேண்டும் மேலும் இல்லற நற்குணமும் வாழ்ந்தவனே மந்திரியாக தகுந்தவன்.

நந்தன மன்னன் தன்னுடைய மந்திரி  பகிசுருதன் மூலம் பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து காப்பாற்றப்பட்டார் அல்லவா! என்று நீதி வாக்கிய மந்திரி ஒரு கேள்வியுடன் கூறி முடித்தார்.

அது எப்படி அந்தக் கதையை எனக்கு விரிவாக தெரிவு என்று போஜராஜன் கேட்கவே நீதி வாக்கிய மந்திரியும் புவன பதியே அப்படியே அந்த கதையை சொல்லுகிறேன் கேளுங்கள் என்று சொல்லிவிட்டு கதையை ஆரம்பித்தார்.


நீதி வாக்கிய மந்திரி சொல்லிய பகிசுருதன் கதை - படிக்க கிளிக் செய்யவும் 

0 Comments