ஒரு ஊரில் வயதான சிவ பக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். சிவனின் பரிபூரண அருள் அவருக்கு இருந்தும் கூட எந்த வித பெருமிதமும் இன்றி மிக எளிமையாக வாழ்ந்து வந்தார். ஒரு நாள் தன்னுடைய குடிசையின் அமர்ந்து கொண்டு கிழிந்த தன் துணியை தைத்துக்கொண்டிருந்தார்.

 இது ஒருபுறம் இருக்க, சிவனும் பார்வதி தேவியும் உலக மக்களின் நிலை அறிய வான் வெளியில் வளம் வந்துகொண்டிருந்தனர். அப்போது பார்வதி தேவி அந்த வயதான சிவ பக்தரை கண்டார். உடனே சிவனிடம் அவரை காண்பித்து, ஐயனே இவருக்கு நாம் ஏதாவது வரம் வழங்க வேண்டும் என்றார். 

அவரை பார்த்த சிவன், அவன் அந்த நிலையை எல்லாம் கடந்து விட்டான் தேவி. நாம் நமது பயணத்தை தொடரலாம் என்றார். ஆனால் பார்வதி தேவி அவரை விடவில்லை. ஒருவழியாக சிவனை அழைத்துக்கொண்டு அந்த பக்தனை காண பார்வதி தேவி வந்தார். 

இவர்களை கண்டதும் அந்த வயதான பக்தர் மனம் மகிழ்ந்தார். தன்னுடைய குடிலில் அமரவைத்து தாகத்திற்கு மோர் கொடுத்தார். பின் தான் செய்துகொண்டிருந்த உடை தைக்கும் பணியை அவர் மீண்டும் தொடங்கினார். 

 சில நிமிடங்கள் இப்படியே சென்றது, உடனே பார்வதி தேவி தன் கண்களால் சிவனிடம் சைகை செய்ய உடனே சிவபெருமான் தன் பக்தனிடம், நாங்கள் விடைபெறுகிறோம் என்றார். தங்களின் வருகை எனக்கு சந்தோசத்தை தந்தது. மகிழ்ச்சியாய் நீங்கள் சென்றுவாருங்கள் என்று கூறிவிட்டு மீண்டும் தன் பணியை அவர் தொடர்கிறார்.

0 Comments