முன்பு ஒரு காலத்தில்  தத்தாத்திஅய்யர்  என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார்.  அவரின் தவம் பூர்த்தி ஆனால் தேவலோக  இந்திரன் தனக்கு  ஏதாவது ஆபத்து நேர்ந்து விடுமோ! என எண்ணினான். இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்பதற்காக தேவலோக  இந்திரன்  தேவலோகத்தில் நடனம் ஆடும் ஊர்வசியை  அனுப்பி அவரின் தவத்தை கலைக்க ஆணை இட்டான். அதனை ஏற்று ஊர்வசியும் பூலோகம் வந்தடைந்தாள்.


ஊர்வசி,  தத்தாத்திஅய்யர் மகரிஷி இருக்கும் இடத்தை அடைந்தாள். அவரின் தவத்தை கலைக்க முற்பட்டாள், நடனம் ஆடினாள் அவரின் தவத்திற்கு பல இடையூறு செய்தும் அவளால் தவத்தை கலைக்க முடியவில்லை, சோர்வுற்றால்,  ஆனால்  முனிவரின் தவத்தை கலைக்காமல் போனால் தேவேந்திரனின் சாபத்திற்கு ஆளாக  நேரிடும்  என்ன செய்வது எப்படியாவது தவத்தை கலைத்தாக வேண்டும்.  எனவே ஒரு முடிவு செய்தாள், எப்படியும் அவரை  மானிட உருவில் இடையூறுசெய்தாள்  இவரிடமும் சாபம் பெற நேரிடும் ஆகையால், ஏதாவது ஒரு விலங்கின் உருவத்தினை எடுத்து அவரின் தவத்தை கலைத்திடலாம் அப்பொழுதுதான் அவர் சாபம் கொடுக்க மாட்டார்  என்று பெண் யானையாக உருவெடுத்தாள். 


பெண் யானையாக மாறிய  ஊர்வசி முனிவரின் தவத்தை கலைத்தாள், முனிவரோ ஒரு நாளும் நமது தவத்தை எந்த விலங்கும் கலைத்ததில்லை இன்று இந்த யானை வந்து நம் தவத்தை களைத்து விட்டதே! என எண்ணி தனது ஞான கண்களால் நடந்தவற்றை பார்த்தார், பெண் யானையாக வந்தது தேவலோக நடன மங்கை ஊர்வசி என அறிந்தார், இவளுக்கு தக்க படத்தை கற்பிக்க வேண்டும் என்று எண்ணி முனிவர் ஆண் யானையாக உருவெடுத்து, பெண் யானையுடன் காதல் வயப்பட்டு  புணர்ந்தார்.


அதனால் அவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது, இருவரும் தனது சுய உருவத்திற்கு வந்தனர், ஊர்வசியோ நடந்ததை எண்ணி வருந்தி முனிவரிடம் மன்னிப்பு கேட்டாள், முனிவரோ பெண்ணே இதில் உன் தவறு ஒன்றும் இல்லை  இந்திரனின் ஆணைக்கு இனங்க நீ இவ்வாறு செய்து விட்டாய், ஆகையால் நீ வந்த வேலை முடிந்து விட்டது நீ தேவலோகம் செல்வாயாக. இப்பெண்குழந்தையை நானே வளர்த்து கொள்கிறேன் என்று கூறினார்.  ஊர்வசியும் அதனை ஏற்று அக்குழந்தையை அவரிடம் குடுத்து விட்டு தேவலோகம் சென்றாள்.


முனிவர்  அக்குழந்தைக்கு பெருந்தெய்வயானை என்று பெயரிட்டு நாளொரு மேனியும் பொழுதொரு  வண்ணமும்-ஆக  வளர்த்து வந்தார்.


இப்படி இருக்க துவராகபுரியை ஆண்டு வரக்கூடிய பலராமசக்கரவர்தி மன்னர்  வேட்டையாட காட்டுக்கு வந்தார், அப்போது தண்ணீர் தாகம் ஏற்பட்டது ஆகையால், தண்ணீரைத் தேடி கடைசியாக அந்த தத்தாத்திரெயர் முனிவர் குடிலுக்கு வந்தார், அவரிடம் குடிக்க நீர்  வேண்டும் என்று கேட்டார். 

முனிவரோ  பெண்ணே பெருந்தெய்வயானை   மன்னருக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வாமா என்று தனது மகளை அழைத்தார் அவளும் நீர் எடுத்துக்கொண்டு வந்தாள்.

 அப்போது அப்பெண்ணை பார்த்த பலராமசக்கரவர்தி மன்னர், முனிவரிடம் இப்பெண் அழகாகவும், லட்சணம் பொருந்தியவளாகவும் இருக்கின்றாள் , இவளை எனக்கு தத்து மகளாக கொடுத்து விடுங்கள், எனக்கும் என் மனைவிக்கும் நீண்ட நாட்களாக குழந்தை இல்லை, இப்பெண்ணை எங்களது மகளாக வளர்த்து மணமுடித்து வைக்குறோம் என்று அவரிடம் வேண்டினர்.


மன்னரின் வேண்டுதலுக்கு செவிமடுத்த முனிவர் சரி எனக்கும் வயதாகி விட்டது உனக்கும் புத்திரபாக்கியம் இல்லை என்கிறாய், எனவே என்மகளை உமக்கு தத்து மகளாக கன்னிகாதானம் செய்து தருகிறேன் என்றார் முனிவர்.



பெருந்தெய்வயானையை அழைத்து வந்தார் பலராம மன்னர்,  அவள் சந்திரனை போன்றும், சூரியனை போன்றும் பிரகாசமாக இருந்ததால்அவளுக்கு பானுமதி என பெயர் சூட்டினார் .  


அதன் பின்னர் பானுமதியை  டில்லியாகிய  அஸ்தினாபுர இளவரசர் துரியோதனமகாராஜாவிற்கு மணமுடித்து கொடுத்தார்.


இப்படியாக பானுமதி பிறப்பு அமைந்தது.

       - நன்றி கதை விளக்கம் கொடுத்தவர்  தெருக்கூத்து வாத்தியார் அரியலூர் மணி அவர்கள்.


2 Comments

  1. Replies
    1. நன்றி மீண்டும் வருக, தமிழர் கதைக்கு ஆதரவு தாருங்கள்

      Delete

நன்றி மீண்டும் வருக, தமிழர் கதைக்கு ஆதரவு தாருங்கள்