வணக்கம் ஆன்மிக நண்பர்களே  நான் இப்பொழுது சொல்லவிருக்கும் கதை என்னவென்று தெரியுமா ?  ஆம்  தலைப்பை பார்த்திருப்பீர்கள்  திரௌபதியின் திருமணம்.  யார் ? இந்த திரௌபதி என்று கேட்கிர்களா ?  இப்பொழுது உங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணம் சரிதான், மகாபாரத போருக்கு காரணமாக இருந்த பாஞ்சாலி ஆகிய திரௌபதியின் திருமணம் பற்றி தான்.....

திரௌபதி பிறப்பு - கதை படிக்க கிளிக் செய்யவும்

திரௌபதி -  துருபத நாட்டு இளவரசி , துருபதன் மகள், திட்டதுய்மன் தங்கை வேள்வி தீயிலே பிறந்தவள் திரௌபதி , அக்கினி சொரூபமானவள் அவளுக்கு திருமணம் செய்து வைக்கவேண்டும் என்பதற்காக,   அர்ஜுனனுக்கு மணம் முடித்து தர வேண்டும் என்ற எண்ணம் இடேர வழி இல்லை போலும் அரக்கு மாளிகையில் தங்கி இருந்த ஐவராஜாக்களும் எரிந்து சாம்பல் ஆகி இருப்பார்கள் எனவே    ஒரு சுயம்வரம் நடத்த துருபத நாட்டு மன்னன் முடிவு செய்தான். அதற்க்காக சுயம்வரம் தலைவனாக தனது மகனை  ஆக்கினான்.

திட்டத்துய்மன்  அவனி ஐம்பத்தாறு தேசத்திற்கும் சுயம்வரம் மடல் அனுப்பினான்.  சுயம்பரத்தில் கலந்துகொள்ள ராஜாக்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு என்று எழுதி இருந்தான்.

இந்த மடல் அத்தினாபுரம் இளவரசர் துரியோதன மகாராஜாவுக்கும் கிடைத்தது, மற்ற ராஜாக்களும் கிடைத்தன.

அணைத்து ராஜாக்களும் சுயம்வரம் பந்தலிலே அமர்ந்திருந்தனர் அப்பொழுது சுயம்வரம் மாடத்திலே  பாஞ்சாலி நின்று சுயம்வரம் பந்தலை பார்த்து கொண்டிருந்தாள், தன் தோழியிடம் கேட்டாள், எனக்கு ஏற்ற மணாளன் வந்துள்ளாரா என்று, தோழியும் அம்மா உங்களுக்கு ஏற்றவாறு நிறைய அழகு வாய்ந்த மன்னர்கள் சபையில் அமர்ந்துள்ளார்கள் என்று கூறினாள்.

இதனை பார்த்து கொண்டிருந்தாள் பாஞ்சாலி, அப்பொழுது சுயம்வரம் பந்தலிலே ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டது, இந்த வில்லை வளைத்து கீழே உள்ள மஞ்சள் நீரை  பார்த்து மேலே உள்ள மச்ச ரேகையை யார் ஒருவர் அருக்கிறாரோ அவருக்கே என் தங்கை பாஞ்சாலியை  திருமணம் முடித்து வைப்பேன் என கூறினான் திட்டத்துய்மன்.


அவையில் இருந்த ஒவ்வொரு மன்னனும் அந்த வில்லை எடுப்பது, துக்கமுடியாமல் நிற்பது, மச்ச ரேகையை  அறுக்காமல் தவிப்பது என இருந்தனர், கடைசியில் துரியோதனன் மற்றும் அவனது தம்பி மார்கள்  வில்வளைக்க மச்ச ரேகையை  அறுக்க முடியவில்லை, பிறகு துரியோதனன் நண்பன் கர்ணன் வில்லை வளைக்க சென்றான், ஆனால் சுயம்வரத் தலைவன் திட்டத்துய்மன், கர்ணா  நீ சூது புத்திரன், தேரோட்டி மகன், நீ ஒரு மன்னன் கிடையாது, ஆகையால் நீ இதில் கலந்து கொள்ள கூடாது விதிமுறைகள் அறியவில்லையோ ! என தடுத்து விட்டான் மற்றும் பாஞ்சலியும் நான் ஒரு தேரோடியின் மகனை மணக்க மாட்டேன் என கூறினாள் அவமானபடுதினாள் இதனை கேட்ட  துரியோதனன் மற்றும் கரண்ணன் தலை கவிழ்ந்தனர்.


திரௌபதி - கர்ணன் மீது கொண்ட காதல்  -  கதை படிக்க கிளிக் செய்யவும்

சபையில் வேறு எந்த மன்னனும் இல்லை, ஆதலால் அதில் ஒரு அந்தணர் ஒருவர் எழுந்து, சுயம்வரத் தலைவரே வில் வலைப்பில்  மன்னர் மட்டும் கலந்து கொள்ளலாமா அல்லது அந்தணரும் கலந்து கொள்ளலாமா? என்று கேட்டார்.  திட்டதுய்மனோ சிறிது யோசித்து, பிறகு  கலந்து கொள்ளலாம் எந்த வித கருத்தும் இல்லை என்று கூறினான்.

அந்த அந்தணன் வேறு யாரும் இல்லை பஞ்ச பாண்டவர்கள்  ஐந்து ராஜாக்கள்,  துரியோதனனுக்கு தெரியக்கூடாது என்பதற்காக மாறுவேடத்தில் அந்தணன் ஆக சுயம்வரம் பந்தலில் இருந்தனர், அதில் அர்ஜுனன் தான் அக்கேள்வியை எழுப்பி பின்னர் வில்லை வளைத்து கீழே உள்ள மஞ்சள் நீரை பார்த்து மேலே உள்ள மச்ச ரேகையை  அறுத்தார்.


சபையில் அனைவரும் இதை பார்த்து வியந்து, ஒரு அந்தணனுக்கு இவ்வளவு திறமையா ! என்று பேசி கொண்டிருந்தனர். பின்னர் பாஞ்சாலியை திருமணம் முடித்து கொள்ளுங்கள் என்று திரௌபதியின் அண்ணன் மற்றும் தந்தை  கேட்டனர். அவர்களும் திருமணம் செய்து கொள்கிறோம் ஆனால் எனது தாய் இல்லாமல் முடியாது ஆகையால் பெண்ணை அழைத்து கொண்டு சென்று எனது தாய் முன்னாள் வைத்து திருமணம் செய்து கொள்கிறான் என்று அர்ஜுனன் உரைத்தான். 

 ஆனால்  இதை தோழி மூலம் அறிந்த திரௌபதி எப்படி ஒரு அந்தணனை மனப்பது , நான்  ராஜாவைத்தான் மணப்பேன் என்றும் அதிலும் ஐந்து ராஜாக்களில் நாடுபிறந்த ராஜாவாகிய அர்ஜுனன் மகாராஜாவை தான்   மணக்க வேண்டும் என்று என் தந்தை சபதம் எடுத்துள்ளார் அது எல்லாம் வீணாகி விடுமே என்று பாஞ்சாலி வேதனைப்பட்டாள், உடனே மாயா கண்ணன் திரௌபதியிடம் ஐவராஜாக்கள் அந்தணன் வேடத்தில் வந்த காரணத்தை எடுத்து கூறி சமாதான படுத்தினான். அவளும் அதை ஏற்று மணக்க சம்மதித்தாள்.


துருபதன் போட்ட சபதம்  - கதை படிக்க கிளிக் செய்யவும்  


ஐவராஜாக்களும் மற்றும் திரௌபதியும், குந்தி தேவி இருக்கும் குயவன் வீட்டிற்கு சென்றனர்.  குந்தி தேவியிடம் அவர்கள், அம்மா ...  நாங்கள் ஒரு கன்னி கொண்டு வந்துள்ளோம் என கூறினார்கள், வயது முதிர்ச்சியின் காரணமாக குந்திக்கு சரியாக காதில் விளவில்லை,கனி என்று விழுந்து விட்டது.  ஆதலால் குந்தி தேவி தன் மக்களிடம் அக்கனியை ஐவரும் பங்கீட்டு கொள்ளுங்கள் என்று கூறினாள்.  தாய் சொல்லை தட்டக்கூடாது என ஐவரும் திரௌபதியை திருமணம் செய்துகொள்ள சம்மதித்தனர்.

திரௌபதியோ    அதனை கேட்டு அதிர்ந்து போனாள், முடியாது ஒரு பெண்ணுக்கு ஐந்து கணவர்களா ? இந்த உலகம் இதை ஏற்குமா ?? நான்   அர்ஜுனன் ஒருவரை தவிர வேறு ஏவரையும் மணக்க மாட்டேன் என மறுத்து விட்டாள்.

கண்ணன் திரௌபதிக்கு அவளது முன் ஜென்ம கதையை கூறினான் . காரணம் அறிந்த திரௌபதி திருமணத்திற்கு ஒப்புக்கொண்டால் . ஆனாலும் நான் ஐந்து கணவர்களை மணந்தால் எப்படி பத்தினியாவேன் என கண்ணனிடம் வினவினாள் ?   என்னதான் தெய்வ பிறவியாக இருந்தாலும் ஐந்து கணவர்கள் எனும் போது திரவ்பதிக்கு மனவருத்தம் இருந்து கொண்டுதான் இருந்தது.

திரௌபதியின் முன் ஜென்மம் - கதை படிக்க கிளிக் செய்யவும் 

கண்ணன் அதற்கு ஒரு வழிமுறைகளை கூறுகிறேன் கேள் தங்கையே !
உன் திருமணம் ஐந்து நாள் நடக்க வேண்டும், 
உனக்கு ஐந்து ராஜாக்களும் மாலை இடுவார்கள் 
நீ அக்கினியில் பிறந்தவள், பரிசுத்தமானவள் ஆகையால்,

முதல் நாள் திருமணம் செய்யும் முன் அக்கினியில் இறங்கி  வந்து தருமனை மணக்க வேண்டும்.

இரண்டாம் நாள் திருமணம் செய்யும் முன் அக்கினியில் இறங்கி வந்து பீமனை மணக்க வேண்டும்.

மூன்றாம்  நாள் திருமணம் செய்யும் முன் அக்கினியில் இறங்கி வந்து அர்ஜுனனை  மணக்க வேண்டும்.

நான்காம் நாள் திருமணம் செய்யும் முன் அக்கினியில் இறங்கி வந்து நகுலனை  மணக்க வேண்டும்.

ஐந்தாம் நாள் திருமணம் செய்யும் முன் அக்கினியில் இறங்கி வந்து சகாதேவனை  மணக்க வேண்டும்.

ஐவருக்கும் தேவி அழியாத பத்தினி - பாஞ்சாலி 

இவ்வாறாக நடத்த வேண்டும் என்று கண்ணன் திரௌபதியிடம் கூறினான்.அதன் படியே   திரௌபதி    திருமணம் நடை பெற்றது.


இப்படியாக திரௌபதி திருமணம் அமைந்தது.


 - நன்றி கதை விளக்கம் கொடுத்தவர்  தெருக்கூத்து வாத்தியார் அரியலூர் மணி அவர்கள்.

   

0 Comments