கழுவுதடா நாலி ங்கு.... 
கணக்கு பாக்குங் தானங்கு.....
காலன் வந்தாலிங்கு.......
நமக்கு கடன் ஏது.......

நம் காயம் சேரும் மண்ணோடு.......

காத்து சேரும் விண்ணோடு.......
கடைசி வரைக்கும் உன்னோடு.....
அங்கு துணை யாறு?....

பொய்த்ததடா பொய்நாடு........

உழைப்பதெல்லாம்  வீண்பாடு.....
உண்மைக்கான மணக்குடு......
உலகமே உயிர் ஆசை........

பொக்கை மகிழும் பொரிமாவு......

நமக்கு ஊருரா  போகுதடா பகல் ராத்திரி.....
தூங்கையிலே  வரும் சாவு.....
இனி திடமேது....?

அறியவரை பிற த்தோற்று .....

எங்கப்பா அருள் ராமசாமி பாட்டு.....
இதெல்லாம் ஆண்டவனின் விளையாட்டு.......


 *********************************************************************************


                                                                        

நான் பெண்ணாக பிறந்த விதியோ..............
இல்ல பிரமதேவன் எழுதி வைத்த சதியோ......

கண்ணாக வளர்ந்து வந்தேன் நானே.....

நாடு கடலில் கவுந்த  படகை போல ஆனேன்.....

மாலத  துயரமா எனக்கு.....

மண்ணில் மாண்டலுமே தீரதந்த என் வழக்கு......
எட்டாத கனியை போல ஆனேன்.......
எனக்கு எடுத்து சொல்ல ஆல் இல்லாமல் போனேன்......

*********************************************************************************


என் தாய் இருந்தும் பலனில்லை......

என் தந்தை  இருந்தும் பலனில்லை .....
நீ இருந்தும் என் வாழ்வில் நிலைல்லாத சுகமில்லை....

நிம்மதி இல்லை ...................

நீண்ட தொல்லை ...................
அம்மணி என் உயிர் கவர எமன் வரவில்லை .....
என்னை  மட்டும் ஏன் படைத்தாய் இறைவா என்று கேட்டேன் ...
உன் தலையெழுத்து இது தன என்று சொல்லி விட்டு மறைந்தான் .
என் அசையும் பாசமும் ............
இப்படி மோசமாய் போகுமா.......
மாசமென்னும் மார்கழியில் பனிபோல் விலகி போகுமா ......
மாளிகையில் நான் பிறந்தேன் மகிழ்ச்சியோடு வாழ ....
ஏன் மரியாய்  இருந்து விட்டால் எல்லோரும் வாழ .....

கெஞ்சுகிறேன் நானம்மா.....

கொஞ்சம் கண் பாரம்மா .....
அஞ்சுகமே அய்யனாரே ஆறுதலை கூறம்மா.......   

*********************************************************************************

அழகு என்னும் மாதரை  நம்பி........
அல்லும்  பகலும் அலையாதே தம்பி..............
அறிவை தீட்டி நடைபோடு அலைபோலே .........

ஆசை என்பது அரைமணிநேரம் .....
ஆத்திரம் என்பது தலைச்சுமை பாரம் ......
ஆறு ஓய்ந்தது அறுபது தூரம் அலைபோலே .......

இன்பம் என்பது எத்தனை தூரம் ........
இருக்கும் காந்தம் போல் ஒரு வாரம் ...........
இருளை போன்றது இல்லற காலம் அலைபோலே .......

ஈட்டி போன்றது பெண்களின் உருவம் ........
ஈடில்லாதது சிலகாலத்தின் பருவம் .............
ஈசன் கொடுத்தது கன்னியின் கருவு அலைபோலே ......

உருவத்தை கண்டு மோசம் போகாதே .........
உந்தன் காலத்திற்கு  அழிவு  தேடாதே ...........

ஊத்த மலம் ஜலம் வழிந்திடும் உடலாம் .........
ஊசி காது பெண்களின் உடலாம் ....உத்து பாரு ..............

எண்ணி பார்த்தால் எத்தனை துன்பம் ............
எங்கெங்கு சென்றாலும் ஜனபலம் வேண்டும் .................
எதையும் காண கனவுகள் வேண்டும் ...............

ஏணி போன்றது பெண்களின் வடிவம் ................
ஏறி இறங்கினால் கைகால் பிணியாம் ................

ஐயா பரிதாபம் என்றாலே போச்சு .............
ஐயங் கொள்ளாமல் இருந்தாலே ஆச்சு ..............
ஐயா என்று அழுதலே போச்சு ................

ஒத்து குடும்பம் நடந்தால் நன்மை .....................
ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் நன்மை ....................
ஒரு பொது வராது.........


ஓசை  காட்டும் மாதரை நம்பி ..........
ஓட விட்டு போகாதே தம்பி .............
ஓகோ என்று ஓசைக்காட்டுவாள்  திசைமாறும்.........

ஓளவை  சொன்னது மாறாது வேதம் .........
அதுவே பூமியில்  மாறாத வேதம் .............. 


- அரியலூர் மணி  தெருக்கூத்து வாத்தியார்

0 Comments