தெருக்கூத்து பாடல்
வீரமணி ஆசிரியர்
நான் பஞ்சனையை விரித்தேன்
அவர் கேட்கும் பொழுது தடை இல்லாமல் பாலும் பழமும் கொடுத்தேன்
மன்னவர் சொல்படிக்கு நான் மாத பிதா மறந்தேன்
என் மடிபிலே சுமந்து காடு மேடு களைந்தேன்
பாசம் உள்ள மன்னவர்கு பஞ்சனையை விரித்தேன்
நான் பஞ்சனையை விரித்தேன்
அவர் கேட்கும் பொழுது தடை இல்லாமல் பாலும் பழமும் கொடுத்தேன்
தோட்டத்திலே இருக்குது பார் கொத்து கொத்தாய் அரும்பு
அதை தொட்டும் கூட பார்களையே தாசி போட்ட மருந்து
பாசம் உள்ள மன்னவர்கு பஞ்சனையை விரித்தேன்
நான் பஞ்சனையை விரித்தேன்
அவர் கேட்கும் பொழுது தடை இல்லாமல் பாலும் பழமும் கொடுத்தேன்
வானத்திலே பூத்திருக்கும் நட்சத்திர அரும்பு
அதை தொட்டும் நானும் பாக்களையே இறைவன் போட்ட கணக்கு
பாசம் உள்ள மன்னவர்கு பஞ்சனையை விரித்தேன்
நான் பஞ்சனையை விரித்தேன்
அவர் கேட்கும் பொழுது தடை இல்லாமல் பாலும் பழமும் கொடுத்தேன்
இதுதான் என் தலைவிதியா என்று இறைவனிடம் கேட்டேன்
இதுதான் உன் தலைவிதி என்று இறைவன் சொல்லி மறைந்தான்
பாசம் உள்ள மன்னவர்கு பஞ்சனையை விரித்தேன்
நான் பஞ்சனையை விரித்தேன்
அவர் கேட்கும் பொழுது தடை இல்லாமல் பாலும் பழமும் கொடுத்தேன்
- கீழ்குப்பம் முருகன்
0 Comments
நன்றி மீண்டும் வருக, தமிழர் கதைக்கு ஆதரவு தாருங்கள்