மாகாளி அம்மன் தாலாட்டு பாடல்  




பெற்றவளே பெரியவளே என்னைப் பெற்றவளே பெரியவளே 
 உன் பம்பை சத்தம் காதில் வாங்கி போட்டுக்கோ 
அதில் உன் புகழை பாடுகிறேன் கேட்டுக்கோ 
 மண்ணாளும் உமையவளாம்  மங்கை சிவகாமியம்மா 
என்னாளும் துணையிருப்பாள் என் தாயே மாகாளி

பெற்றவளே பெரியவளே என்னைப் பெற்றவளே பெரியவளே

மனதார நினைத்தவருக்கு மனக்குறை தீரும்மம்மா
உளமார நினைத்தவருக்கு உள்ள குறை தீருமம்மா

பெற்றவளே பெரியவளே என்னைப் பெற்றவளே பெரியவளே

கும்பிட்ட மக்களுக்கு குறைகளை தீருமம்மா
கையெடுத்த மக்களுக்கு கஷ்டங்களை தீருமம்மா

பெற்றவளே பெரியவளே என்னைப் பெற்றவளே பெரியவளே

மடியேந்தி கேட்டவரம் மாறாமல் நீ கொடம்மா
 சிலர் ஏந்தி கேட்ட வரம் சிதறாமல் நீ கொடம்மா

பெற்றவளே பெரியவளே என்னைப் பெற்றவளே பெரியவளே

மண்டியிட்டு கேட்டவரம் மாறாமல் நீ கொடம்மா
 என் தாயே மாகாளி மனமிரங்கி வாருமம்மா

பெற்றவளே பெரியவளே என்னைப் பெற்றவளே பெரியவளே

நம்பி வந்த மக்களுக்கு நல்ல வரம் நீ அருள்வாய்
 நீயே கதியென்று நாடியே வந்தோம்மம்மா

பெற்றவளே பெரியவளே என்னைப் பெற்றவளே பெரியவளே

வந்த மக்கள் அனைவருமே வாழ்வாங்கு வாழனும்மம்மா
 வரம் அருள வேண்டும் அம்மா என் தாயே மாகாளி

பெற்றவளே பெரியவளே என்னைப் பெற்றவளே பெரியவளே

துதிப்போர்க்கு துன்பம் எல்லாம் துரத்தி அடித்திடம்மா
வணங்குவோர் வறுமையெல்லாம் தீர்த்திடுவாய் மாகாளி

பெற்றவளே பெரியவளே என்னைப் பெற்றவளே பெரியவளே

மாயனது தங்கையம்மா பரமனது மங்கையம்மா
மாயானம் காப்பவளாம்  காளியம்மா  மாகாளியம்மா

ஆராரோ ஆரிராரோ  ஆரிராரிராரோ
ஆராரோ ஆரிராரோ  ஆரிராரிராரோ

மஞ்சள் முகத்தழகி மங்காத  குலவிளக்கு
 மஞ்சள் முகம் மாறும் முன்னே மக்கள் குறை தீரும்மம்மா

ஆராரோ ஆரிராரோ  ஆரிராரிராரோ
ஆராரோ ஆரிராரோ  ஆரிராரிராரோ

தீராத தோஷங்களை தீர்த்தருள வேண்டுமம்மா
ஆராத வினைகளையும் ஆற்றிட வேண்டுமம்மா

ஆராரோ ஆரிராரோ  ஆரிராரிராரோ
ஆராரோ ஆரிராரோ  ஆரிராரிராரோ

உன்னை இன்றி வேறு துணை அம்மா      எங்களுக்கு யாரும் இல்லை
கண் திறந்து பாரம்மா கட்டழகி மாகாளி

ஆராரோ ஆரிராரோ  ஆரிராரிராரோ
ஆராரோ ஆரிராரோ  ஆரிராரிராரோ


ஊரார் அடித்திருந்தால் உன்னிடம் சொல்லிடலாம்
நீயே அடித்திருந்தால் யாரிடம் சொல்வதம்மா

ஆராரோ ஆரிராரோ  ஆரிராரிராரோ
ஆராரோ ஆரிராரோ  ஆரிராரிராரோ

கல்லும் கரைந்துதிடும் உன்மனம் கரையலையோ
இரும்பும்  உருகிடுமே உன் மணம் உருகளையோ

ஆராரோ ஆரிராரோ  ஆரிராரிராரோ
ஆராரோ ஆரிராரோ  ஆரிராரிராரோ

கல்லோடி  உன் மனது கரையலையோ எள்ளளவு
இரும்போமா  உன் மனது குரையலையா  எள்ளளவு

ஆராரோ ஆரிராரோ  ஆரிராரிராரோ
ஆராரோ ஆரிராரோ  ஆரிராரிராரோ

நீ பெற்ற குழந்தையம்மா நட்ட நடு வீதியிலே
 அனாதையாய் நின்றதை ஆதரிக்க வேண்டும்மம்மா

ஆராரோ ஆரிராரோ  ஆரிராரிராரோ
ஆராரோ ஆரிராரோ  ஆரிராரிராரோ

எந்த மனம் நொந்தாலும் இங்கு வந்த மனம் வாழவையம்மா
வரம் அருள வேண்டும்மம்மா மாகாளி உமையவளே

ஆராரோ ஆரிராரோ  ஆரிராரிராரோ
ஆராரோ ஆரிராரோ  ஆரிராரிராரோ

நோயற்ற வாழ்வு தனை தந்தருள வேண்டும்மம்மா
 குறைவில்லா செல்வத்தையும் நீ அருள வேண்டும்மம்மா

ஆராரோ ஆரிராரோ  ஆரிராரிராரோ
ஆராரோ ஆரிராரோ  ஆரிராரிராரோ

ஆறு தப்பு நூறு பிழை அடியார்கள் செய்தாலும்
தாயே மனம் பொருத்து காத்திடுவாய் மாகாளி

ஆராரோ ஆரிராரோ  ஆரிராரிராரோ
ஆராரோ ஆரிராரோ  ஆரிராரிராரோ



மாகாளி அம்மன் தாலாட்டு பம்பை, இருகூர் வீரப்பன் பம்பை உடுக்கை பாடல் குரூப்ஸ் ,கோவை.செல் - 9865437889


0 Comments