நகலூர் என்ற கிராமம் மேற்கு தொடர்சி மலைக்கு அடிவாரத்தில் உள்ளது அங்கு விவசாயமே முக்கிய தொழிலாக இருந்தது. அப்படி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் போது ஒருநாள் ஒரு விவசாயின் கனவில் அம்மன் தோன்றி தான் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் பெரும்பள்ளம் என்ற ஆற்றில் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டு மலையில் இருந்து தனது சிலை அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கிடக்கிறேன் கேட்பார், அற்று இருக்கிறேன் நீ வந்து என்னை எடுத்து பூஜை செய்வாயாக என்று கூறினாள். இதை கேட்ட விவசாயி விழித்து கொண்டார் பின் அம்மனின் வார்த்தை படி அவர் ஆற்றில் இறங்கி சிலையை தேடினார் நீண்ட நேர தேடலின் விளைவால் மூன்று சிலைகளை மீட்டெடுத்தார். அதனை அந்த ஊரிலே  பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்ய ஆரம்பித்தார் அதன் பின் அம்மனின் அருள் கிடைக்க எல்லாரும் சந்தோசமாக வாழ்ந்தனர். 

தன்னை தேடி வரும் பக்தர்களுக்கு, நல்வக்கு அருள்வதும்  கேட்கும் வரம் தருவதும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை கொடுப்பதும், அம்மை நோய் தீர்த்தும்,  பல நல்லதை செய்தும் அம்மன் மக்களை காத்து வந்தாள்.

இப்படி நாட்கள் செல்ல செல்ல   ஒரு நாள் இரவு  குடி போதையில் ஒரு தீயவன் அம்மனின் சிலைகளை பிடிங்கி தூக்கி எறிந்து அம்மனின் கோபத்துக்கு ஆளாகி, அவன்   மூன்று மாதத்தில்  உயிர் இழந்தன் அவனை  சார்ந்தவர்களும் பல இன்னல்களுக்கு ஆளாகினர்.

அம்மன்  கேட்பார் அற்று இருந்தால் அவளை வணக்கிய மக்களும் அவளை மறந்து காலப்போக்கில் இடம் பெயர்ந்தனர் சிறிது காலம் இப்படியே சென்றன . 

நாகலூருக்கு, உறவினர் வீட்டிற்கு வந்த ஒரு  பெண் உறங்கி கொண்டு இருக்கும்  போது, அவள்  மீது நடு நிசியில் அதுவும் அர்த்த ஜமா நேரத்தில் அம்மன் அருள் வந்து ஆடா தொடங்கினாள், அருள்மொழி கூராளானால் தான் எங்கிருந்து வந்தேன் என்பதையும்,  இவ்வாறு பிடிங்கி எரியப்பட்டதாகவும் வந்த கதையும் கூறி,   என்னை எடுத்து பூஜை செய்யுங்கள், எனக்கு உடுதிகொள்ள சீலை கூட இல்லை என்றும் அழுதாள்,  மூன்றுபேர் அக்க தங்கைகள் நாங்கள் என்றும்  மாரியம்மன், செலம்பூரம்மன், பத்திரகாளி அம்மன் என தனது பெயர்களை கூறினாள், 

 பின்னர் அப்பெண்ணின் அருள்மொழி கேட்டு அந்த பகுதி மக்கள் அந்த அம்மனுக்கு  மீண்டும்  பூஜைகள் நடத்த ஆரம்பித்தனர். அம்மன் தன் அருளை வாரி வாரி வழங்கினால், எல்லா மக்களையும்  காத்து நின்றாள், அம்மன் நடு காட்டில் இருந்தது. [கோவில் இல்லாமல் இருப்பதால் அப்பொழுது அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் அம்மனுக்கு மண்ணை குழைத்து செங்களை வைத்து கோவில்  கட்டினர்]. சிறுவர் சிறுமியர்கள்  கட்டிய கோவில் அப்படியே இன்றளவும்  இருக்கின்றது.


இவ்வாறு சிறந்து விளங்கிய அம்மனுக்கு பவர்ணமி  மற்றும் அம்மாவாசை தினங்களில் சிறப்பு பூஜை மற்றும் அவிசேகங்கள் அன்னதானம் நடந்தது.   

இப்படியே நாட்கள் சென்றுகொண்டிருக்க சூழ்ச்சிகள்  பல ஏற்பட்டு அம்மனினின் பூஜைகள் அனைத்தும்  நிறுத்தப்பட்டன.



மண் மற்றும் செங்கல் வைத்து சிறுவர்களால் கட்ட பட்ட கோவில் 


ஒரு வேலை   அம்மனுக்கு  அந்த  சிறுவர்கள் கட்டிய மண் கோவிலே பிடித்து விட்டது போல அதனாலே என்னவோ கோவில் கட்ட முடியவில்லை போலும்.... [ தான் முதலில் மலைத்தொடரில் குடிகொண்டிருந்தால் வெட்டவெளியில் இருந்து இருப்பாள் அதனால் கூட கோவில் வேண்டாம் என்று இருக்கலாம் ] ஆனால்  மக்கள் அனைவரும் அந்த அம்மனை ஆலயத்த மாரியம்மன் என அழைக்கின்றனர். 

ஆலயம் இல்லாமல் இருப்பதால் அழைக்கின்றனர் போலும்,  ஆனால் தற்போது அம்மன் அந்த நிலையிலே இருக்கின்றாள் பூஜை இல்லாமல் இருக்கிறாள்.


ஆலயத்த மாரியம்மன் 

ஆனால்  பக்தர்களின் ஆசையோ அம்மனுக்கு கோவில் கட்டவேண்டும் என்பதே !  அம்மன் மனம் வைப்பாளா ?


மக்களின் வரவை நாடி  அவர்களின் அன்புக்கும், பூஜைகளுக்கும் எதிர் நோக்கி  சகோதரிகளுடன்  காத்திருக்கும் ஆலயத்த மாரியம்மன்.




இந்த ஆலயத்த மாரியம்மன் கோவில் ஈரோடு மாவட்டம்  அந்தியூர் அருகே உள்ள நகலூர் என்ற கிராமத்தில் இருக்கிறது.

ஊர்மக்கள் கூறிய உண்மைக் கதை
தகவலுக்கு நன்றி தமிழ்செல்வன் 

0 Comments